1. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
2. பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
3. பொருத்துக:
சிந்து சமவெளி நகரங்கள் அகழ்வாராய்ச்சியாளர்
(a) சன்ஹூ-தாரோ 1. சூரஜ் பான்
(b) லோத்தல் 2. என்.ஜி. மஜும்தார்
(c) பனாவளி 3. எஸ்.ஆர். ராவ்
(d) மிட்டாதல் 4. பிஷ்ட்
(a) (b) (c) (d)
4. கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக:
(i) 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை தாக்கினார்
(ii) 1929-இல் பகத்சிங் பி.கெ. தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசினார்
(iii) 1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை நிறுவினார்
5. கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
1. பகுத்தறிவு
2. விடுதலை
3. குடியரசு
4. புரட்சி
6. கூற்று: இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
காரணம்: மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
7. பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. பொருளாதார நிலைத்தன்மை
(b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி
(c) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் 3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள்
(d) நான்காவது ஐந்தாண்டு திட்டம் 4. சுய உருவாக்கப் பொருளாதாரம்
(a) (b) (c) (d)
8. கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
(i) காந்தியத் திட்டம்
(ii) பாம்பே திட்டம்
(iii) ஜவஹர்லால் நேரு திட்டம்
(iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
9. 2020-21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு
வரிசையில் வரிசைப்படுத்துக
(i) GST
(ii) தனி வருமான வரி
(iii) தீர்வை
(iv) நிறுவன வரி
(v) சுங்க வரி
10. பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
(i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை